வேளச்சேரி கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்; கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்: போலீஸ் குவிப்பு பதற்றம்

சென்னை:
சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது.

சென்னை வேளச்சேரியில் குருநானக் கல்லூரி (தன்னாட்சி) இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் இன்று காலை திடீரென கையில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் இதுகுறித்து விசாரிக்கையில், கல்லூரி கட்டணத்தை குறைக்க வேண்டும். தேர்வு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், மாணவர் கல்லூரி வருகை பதிவேட்டில் 75 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் அதற்காக வசூலிக்கப்படும் ரூ.5 ஆயிரம் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்றும், விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு குத்தகை விடக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக தலைமை நிர்வாகி (எச்.ஓ.டி.), கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காததால் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக வேளச்சேரி பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்