சாராயக்கடைக்கு இடம் கொடுத்தால் வருவாய்? ஜல்லிக்கட்டுக்கு இடம்கொடுத்தால் வீண் செலவா?: சீமான் காட்டம்

சென்னை:
த.வெ.க எம்.எல்.ஏவின் கருத்துக்கு, தமிழ்நாட்டில் தெருக்கு தெரு இருக்கும் சாராயக் கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா? என சீமான் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வீட்டு வசதித்துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தில் உரையாற்றிய சோழவந்தான் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிக்க தேவையில்லை. அதற்கு மாறாக மற்ற திட்டங்களுக்கு செலவழிக்கலாம்” என்று தெரிவித்தார். ஜல்லிக்கட்டு தொடர்பாக அவர் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது.
த.வெ.க எம்.எல்.ஏ கருப்பையாவின் கருத்துக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்டுப் பெறுவதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேச வேண்டிய தேவை என்ன? தமிழ்நாட்டு தெருக்கு தெரு இருக்கும் சாராயக்கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா?
சாராயக்கடைக்கு அரசு இடம் கொடுத்தால் அது வருவாய்; ஜல்லிக்கட்டுக்கு அரசு இடம் கொடுத்தால் அது வீண் செலவா? எப்படிபட்ட மோசமான பார்வை இது?
ஜல்லிக்கட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது தமிழர்களின் வேளாண்மையோடும், கால்நடை வளர்ப்போடும், நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்போடும், கிராமியப் பொருளாதாரத்தோடும் பின்னிப் பிணைந்த வாழ்வியல் பண்பாடு. மண்ணின் வரலாற்றை உணராமல், “இளைஞர்களைச் சீரழிக்கும் ஜல்லிக்கட்டு” என்று பேசுவது அறியாமையின் உச்சமல்லவா? அதுவும் உலகமே அறிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தனது தொகுதிக்குள் கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்தே இப்படியொரு கருத்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சாராயக்கடைக்கு இடம் கொடுத்தால் வருவாய்? ஜல்லிக்கட்டுக்கு இடம்கொடுத்தால் வீண் செலவா?: சீமான் காட்டம்

சென்னை:த.வெ.க எம்.எல்.ஏவின் கருத்துக்கு, தமிழ்நாட்டில் தெருக்கு தெரு இருக்கும் சாராயக் கடைக்கு சென்று

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகை:நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

ஊழல் விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா; இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜக

பெங்களூரு:கர்நாடகாவில் கடந்த 2024-ம் ஆண்டு அரசு கட்டுப்பாட்டில் உள்ள‌ வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி