“மக்களை தேடி மேயர்” புதிய திட்டம் அறிமுகம்- சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் அறிவிப்பு

சென்னை:
சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் மாமன்றக் கூட்டம் தொடங்கியது. சென்னை மாநகராட்சியின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மாநகராட்சி மேயர் பிரியா தாக்கல் செய்தார். இதில் சென்னை மாநகராட்சிக்கு 80 புதிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது/அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • மாமன்ற உறுப்பினர்களுக்கு வார்டு மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சமாக உயர்வு.
  • சென்னை பள்ளிகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் .
  • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகளில் ஊக்கத்தொகை ரூ.1500ல் இருந்து ரூ.3000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • மண்டலங்கள் 4,5,6,7,8 ஆகியவற்றில் பணிபுரியும் 10,002 தூய்மை பணியாளர்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இரவில் ஒளிரும் புதிய வடிவமைப்புடன் கூடிய சீருடைகள் ஆண்டிற்கு 2 வழங்கப்படும். இதற்காக ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை கல்விச் சுற்றுலாவாக, தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்துச் செல்ல நடவடிக்கை.
  • சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் 452 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் 78 கிமீ தொலைவிற்கு ரூ. 55.61 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்படும்.
  • சென்னை மாநகர மக்களின் குறைகளை கண்டறிந்து அவற்றின் மீது தீர்வுகாண சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், மாதத்திற்கு ஒருமுறை “மக்களைத் தேடி மேயர் திட்டம்” என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 1913 அமைப்பு மையம் மூலமாக பொதுமக்களிடம் புகார்கள் பெறப்பட்டு கூட்டமைப்புகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • ‘நம்ம சென்னை செயலி’ மூலமாக பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தபால் மூலம் ஆணையர் அலுவலகம், வட்டார அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களிலும் பொதுமக்களிடம் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • தபால் மூலம் ஆணையர் அலுவலகம் வட்டார அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களிலும், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ரூ.35 லட்சம் செலவில் தரமான விக்டர் கண்ட்ரோல் உபகரணம் வழங்கப்படும். சென்னை மாநகரில் நாய்களை பிடிப்பதற்கு 6 புதிய வாகனங்கள் ரூ.60 லட்சம் செலவிலும், மாடுகளை பிடிப்பதற்கு 5 புதிய வாகனங்கள் ரூ.1.35 கோடி மதிப்பிலும் வழங்கப்படும்.
  • ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி மீதான தடை அமலாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி சோதனை அடிப்படையில் மஞ்சப்பை வழங்கும் திட்டம் சுய உதவிக்குழுவுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
  • மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள பொதுமக்கள் மேயரிடம் வழங்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை களையும் பொருட்டு மேயர் மாதத்திற்கு ஒருமுறை ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில் மனுக்களை நேரடியாக பெறும் வகையில் ‘மக்களை தேடி மேயர் திட்டம்‘ வருகிற நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும்.
  • வாகன நிறுத்த நடைமுறை அமைப்பில் உள்ள சிக்கலை தீர்க்க ஒரு பிரத்தியேகமான வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை குழுமம் என்ற பிரிவு ஏற்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி உறுப்பினர்களின் வளர்ச்சி மேம்பாட்டு நிதியானது ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும்.
    இவ்வாறு மேயர் பிரியா கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.