அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நோபால் வீசுவதை கட்டுப்படுத்தாவிட்டால் புதிய கேப்டன் கீழ் விளையாடுங்கள்: தோனி எச்சரிக்கை

சென்னை:
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே – லக்னோ அணிகள் மோதியது. இந்தப்போட்டியில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்களும், டிவோன் கான்வே 47 ரன்களும் விளாசி சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். பின்னர் வந்த மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா சொற்ப ரன்களில் வெளியேறினர்.
கடைசி ஓவரில் களம் புகுந்த தோனி, இரண்டு சிக்சர் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசிக் கட்டத்தில் அம்பத்தி ராயுடு சற்று அதிரடியாக ஆடியதால், சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. பின்னர், சவாலான இலக்கை துரத்திய லக்னோ அணி பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக ஆடியது. அணியின் ஸ்கோர் 79 ஆக இருந்த போது, தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 20 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த கைல் மேயர்ஸ் 22 பந்துகளில் 53 ரன்கள் குவித்து மிரட்டினார்.
இதையடுத்து, சீரான இடைவெளியில் லக்னோ அணி விக்கெட்டை பறிகொடுத்தாலும், கடைசிக் கட்டத்தில் நிகோலஸ் பூரன் மற்றும் அயூஸ் படோனி சென்னை அணிக்கு அச்சத்தை ஏற்படுத்தினர். இருப்பினும், கடைசிக் கட்டத்தில் சென்னை வீரர்கள் நேர்த்தியாக பந்துவீசியதால், 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி, சென்னை அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சு சுமாராக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியதோடு நிறைய எக்ஸ்ட்ராஸ் கொடுத்தார்கள். சென்னை அணி பந்துவீச்சாளர்கள் 13 வைடு, 3 நோபால் வீசியுள்ளனர்.
இதுபற்றி பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, ‘எங்கள் பந்துவீச்சாளர்கள் நிறைய நோபால் மற்றும் வைட் பந்துகளை வீசினர். நிச்சயமாக இதுநல்ல விஷயம் கிடையாது. நோபால் வீசுவதை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். அணியின் வேகப்பந்து வீச்சு தரம் இன்னும் உயர வேண்டும். மைதானம், பிட்ச் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு பந்துவீச கற்றுக்கொள்ள வேண்டும்.
எதிரணி வீரர்கள் என்ன செய்கிறார்கள் என கவனிக்க வேண்டும். அந்த யுக்தியை பயன்படுத்த வேண்டும். நோபால் வீசுவதை பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்த வேண்டும் இல்லையென்றால் வீரர்கள் புதிய கேப்டன் கீழ் விளையாட நேரிடும் என தனது பாணியில் எச்சரித்தார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை