ஓபிஎஸ் மேல் முறையீடு 20, 21-ம் தேதி இறுதி விசாரணை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை:
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்தும் பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அதிமுக சார்பில் ஏப்ரல் 16-ம் தேதி செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென ஓபிஎஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி முறையிட்டார்.
அதன்படி அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பினரும் வாதங்களை முன்வைத்தனர்.
இரு தரப்ப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கில் திட்டமிட்டபடி ஏப்ரல் 20, 21-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை நடத்தப்படும் என்றும் வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் இல்லை எனவும் தேவைப்பட்டால் ஏப்.24-ந் தேதியும் இறுதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.
தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்த வேண்டாம் எந்த முடிவு எடுத்தாலும் அது மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்

பொங்கல் பண்டிகை முதல் இல்லத்தரசிகளுக்கு ஆண்டிற்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்: முதல்வர்

சென்னை:ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை