எல்லைப் பாதுகாப்பில் இந்தியா மாறிவிட்டது; பதிலடி கொடுக்கும்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

கம்பாலா:
எல்லையை பாதுகாப்பதில் இந்தியாவின் அணுகுமுறை மாறிவிட்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உகாண்டா சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தலைநகர் கம்பாலாவில் இந்திய சமூகத்தினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எழுந்து நிற்கத் தயாராக இருக்கும் வித்தியாசமான இந்தியாவை தற்போது மக்கள் பார்க்கிறார்கள். கடந்த 2016ல் ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கான பதிலடியாக இருந்தாலும் சரி, 2019-ல் நிகழ்ந்த புல்வாமா தாக்குதலுக்கான பதிலடியாக இருந்தாலும் சரி, தேசிய பாதுகாப்பு சவால்களை திறம்பட எதிர்கொள்ளக்கூடிய புதிய இந்தியாவை மக்கள் பார்க்கிறார்கள். எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களை பல பத்தாண்டுகளாக சகித்து வந்த இந்தியா தற்போது இல்லை. இது பதிலடி கொடுக்கக்கூடிய வித்தியாசமான இந்தியா.
இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறி கடந்த 3 ஆண்டுளாக சீனா எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. இந்தியாவும் பதிலுக்கு கடினமான வானிலை நிலவும் மலை உச்சியிலும் தனது படைகளை நிறுத்தியுள்ளது. இதற்கு முன் இந்தியா இப்படி இருந்தது இல்லை. அதுமட்டுமல்ல, சீன எல்லையை ஒட்டி நாம் பல்வேறு உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி இருக்கிறோம். இதுபோன்ற கட்டமைப்புகள் முன்பே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது நடக்கிறது.
சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை இந்தியா கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெயை எந்த நாட்டிடம் வாங்க வேண்டும், எந்த நாட்டிடம் வாங்கக் கூடாது என யாரும் தற்போது நமக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. நாட்டு மக்களின் நலன் கருதி இந்தியா சுதந்திரமாக முடிவுகளை எடுக்கிறது என்றார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.