அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதுச்சேரி பேரவையை முற்றுகையிட்ட மீனவ கிராம மக்கள்: முதல்வர் ரங்கசாமி பேச்சுவார்த்தை

புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் வம்பாகீரப்பாளையம் சன்னாசித்தோப்பில் அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் ஆண்டுதோறும் மயானக் கொள்ளை விழாவை பிரம்மாண்டமாக நடத்துவார்கள். இங்கு 100 ஆண்டுக்கும் மேலாக கோயிலை சுற்றியுள்ள திடலில் மயானக் கொள்ளை நடந்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் இந்த இடத்தை தனியார் தங்களுக்கு சொந்தமான நிலம் என உரிமை கொண்டாடியுள்ளனர். ஆண்டாண்டாக விழா நடத்தும் இடத்தில் எப்படி உரிமை கொண்டாடுவீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். அதோடு, இன்று முதல்வரை சட்டப்பேரவையில் சந்தித்து முறையிட உப்பளம் மின்துறை அலுவலகம் அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலத்துக்கு முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் தலைமை வகித்தார். தகவலறிந்த தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி அங்கு வந்தார். மீனவ கிராம மக்களுடன் பேசினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சட்டப்பேரவைக்கு வந்தார். அன்பழகன் தலைமையில் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள், பொதுமக்கள் ஊர்வலமாக சட்டப்பேரவை நோக்கி வந்தனர்.அவர்களை சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் அருகே போலீஸார் தடுப்புகளை அமைத்து தடுத்தால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸார் தடுப்புகளை மீறி சட்டப்பேரவை நுழைவுவாயிலுக்கு வந்தனர். அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். பேரவையின் கதவுகள் மூடப்பட்டன. பின்னர், முதல்வர் ரங்கசாமியை சந்திக்க முக்கிய நிர்வாகிகளை அனுமதிப்பதாக சபைக் காவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் தலைமையில் மீனவ பஞ்சாயத்தார், முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர். அப்போது பேரவைத் தலைவர் செல்வம், தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி ஆகியோர் முதல்வர் அறையில் இருந்தனர்.
அப்போது அன்பழகன், “வம்பாகீரப்பாளையம் சன்னாசித்தோப்பு மயானக் கொள்ளை விழா நூற்றாண்டுக்கும் மேல் நடந்து வருகிறது. இதுவரை அந்த நிலத்துக்கு யாரும் உரிமை கோரியதில்லை. இந்த மயானக் கொள்ளை நடைபெறும் நிலத்தை 1922-ம் ஆண்டு செய்த பதிவை சுட்டிக்காட்டி, 4 பேர் பத்திரம் பதிந்துள்ளனர். இது தொடர்பாக ஆட்சியரை சந்தித்து புகார் அளித்துள்ளோம். இந்த நிலத்தை மீட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து தொடர்ந்து மயானக் கொள்ளை நடைபெற வழிசெய்ய வேண்டும்“ என்றார். அதையடுத்து அங்கிருந்த கோயில் தரப்பினரும் பேசினர்.
இறுதியில் முதல்வர் ரங்கசாமி, “நிலம் தனியாருக்கு சொந்தமாக இருந்தால் அதை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. தவறான பத்திரப் பதிவு செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரப் பதிவு தொடர்பாக விசாரணை செய்யப்படும்“ என்றார். அதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை