தலைவர்கள் ரமலான் வாழ்த்து

சென்னை:
உலகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்:
நபிகள் காட்டிய சமத்துவ சமுதாயம்அமைக்கும் பணியில் சமரசமின்றிதனது பயணத்தை திமுகவும், அரசும் தொடர்கிறது. என்றென்றும் தொடரும். நபிகள் போதித்தவழி நின்று நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரம்ஜான் கொண்டாடும் முஸ்லிம் சமூகத்தினர் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த ரம்ஜான் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் என்றென்றும் இன்பமும், நலமும் நிறைந்து இனிமை பெருகட்டும்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி:
தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாதஇதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகுக்கு பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளை செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும். இவ்வாறாக வாழ்த்து தெரிவித்தனர்.

கவிஞர் வைரமுத்து

வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“மனம் உடல் வாக்கு
மூன்றையும் நெறிப்படுத்தி
உணவு பானம் இச்சை
மூன்றையும் புறப்படுத்தி
ஒரு மனிதன் தன்னைத்தானே
தூய்மைப் படுத்திக்கொள்ளும்
நோன்பு என்பது
ஓர் உன்னத நன்னெறி அல்லவா!
அந்த நெறியை
நழுவாமலும் வழுவாமலும்
கடைப்பிடிக்கும்
உலக இஸ்லாமிய சமூகத்துக்கு
என் ரமலான் வாழ்த்துக்கள்”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.