அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குரூப்-1 இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் – சைதை துரைசாமி அறிவிப்பு…

சைதை துரைசாமியின் அவர்களின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்து முதன்மைத்தேர்வு எழுதியவர்களில் 9 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். தொடர்ந்து நேர்முகத்தேர்வு இலவச பயிற்சி அளிக்கப்படும். இதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியை தலைமையாக கொண்டு மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் செயல்பட்டு வருகின்றது. இந்த பயிற்சி மையத்தில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் இந்திய அளவில் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவற்றிற்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பயிற்சி அளிக்கிறது.

கடந்த 14 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., இந்திய வனத்துறை பணி ஆகிய பதவிகளிலும், டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-1, 2, 2ஏ, சப்-இன்ஸ்பெக்டர், உதவி என்ஜினீயர், பஞ்சாயத்துராஜ், பொதுப்பணித்துறையில் உள்ள பதவிகளிலும் இதுவரை 3 ஆயிரத்து 612 பேர் வெற்றி பெற்று மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு உயர்ந்த பதவிகளில் இருக்கின்றார்கள்.

அந்த வரிசையில் குரூப்-1 பதவிகளுக்கு நடந்த முதல் நிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வுகளுக்கு மனிதநேய பயிற்சி மையம் பயிற்சி வழங்கியது. இதில் முதன்மைத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியான நிலையில், மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 9 பேர் அதில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

நேர்முகத்தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி, மனிதநேய இலவச பயிற்சி மையத்தில் இலவசமாக நடத்தப்பட உள்ளது. பங்கேற்க விரும்பும் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் சமீபத்தில் எடுக்கப்பட்ட தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முதன்மைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் 1.7.2022 (இன்று) முதல், சென்னை சி.ஐ.டி.நகரில் உள்ள மனிதநேயம் பயிற்சி மையத்தில் நேரிலோ, 044-24358373, 24330095, 8428431107 என்ற தொலைபேசி, செல்போன் எண் மூலமாகவோ, manidhanaeyam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளுங்கள். நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி 2-ந்தேதி (நாளை) முதல் அளிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை