டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் வந்த இந்தியா…!

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் ஆண்டு தரவரிசை பட்டியலில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. வருடாந்திர தரவரிசை மதிப்பீட்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. இந்தியா 119 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தது. ஆண்டு தர நிர்ணய மதிப்பீடுகளின்படி மே 2020 முதல் மே 2022 வரை நடைபெற்ற போட்டிகளுக்கு 50 சதவிகித புள்ளிகளும், அதற்கு அடுத்த போட்டிகளுக்கு 100 சதவிகித புள்ளிகளும் வழங்கப்படும். இதனால் 2019-2020ல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 எனவும், நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 எனவும் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் வெற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 2021-2022ல் இங்கிலாந்துடன் வென்ற (4-0) தொடருக்கும் பாதி புள்ளிகளே கிடைத்தன. இதனால் ஆஸ்திரேலிய அணியின் புள்ளிகள் 121-ல் இருந்து 116 ஆக குறைந்துள்ளது.

இந்தியா 2019-ல் நியூஸிலாந்து அணியிடம் 2-0 என தோல்வி அடைந்தது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதனால் 2 புள்ளிகள் அதிகமாகி இந்திய அணி121 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. இங்கிலாந்து அணி 114 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் தொடர்கிறது. மற்ற அணிகளின் இடங்களில் எந்தவித மாற்றங்களும் இல்லை. தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் முறையே 4 முதல் 10 இடங்களில் உள்ளது. வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் தி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு