தூத்துக்குடியில் போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு – நாளை மறுநாள் தொடங்குகிறது

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 615 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஆயிரத்து 599 போலீஸ்காரர்கள் பணியிடங்களுக்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் விவரங்கள் மற்றும் தேர்வு குறித்து tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இந்த தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடக்கிறது. மேலும் இந்த போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

எனவே இந்த போட்டித் தேர்வுக்கு தயாராக உள்ள தேர்வர்கள், தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரடியாக தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் Thoothukudi Employment Office Telegram channel-ல் பகிரப்பட்டுள்ள Google Forms -ஐ பூர்த்தி செய்தும் இலவச பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்யலாம். போலீஸ் துறை பணிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச