சென்னை : சைதாப்பேட்டை 2023 மே 15 தகவல் எக்ஸ்பிரஸ் சைதாப்பேட்டை தலைமை அலுவலகத்தில் பத்திரிகை நிறுவனர் ஆசிரியர் ஆ. இருதியராஜ் அவர்களின் தலைமையில் பத்திரிகை வளர்ச்சி குறித்த கலந்துரையாடல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் போன்ற மாவட்டங்களிலிருந்து தலைமை நிருபர்கள், புகைப்பட கலைஞர்கள் உட்பட தொகுதிகளின் நிருபர்கள் பலர் கலந்துகொண்டு பத்திரிக்கை வளர்ச்சிக்கான பல்வேறு கருத்துக்கள் பகிர்ந்து கூட்டத்தினை சிறப்பித்தனர்.









