பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், அசோக்
நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருமுறை உபயோகப்படுத்தி
தூக்கி எறியக்கூடிய நெகிழி பொருட்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள்
மற்றும் அதனைத் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று
(16.06.2023) நடத்தப்பட்டு, அங்கு பயிலும் மாணவியர் மற்றும்
ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இம்முகாமில் குப்பைகளை வகைப்பிரித்து அளித்தலின் அவசியம், ஒரு
தடவை உபயோகப்படுத்தி தூக்கி எறியக் கூடிய நெகிழிப் பொருட்களால்
ஏற்படும் சுகாதார சீர்கேடுகள், அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய
பொருட்கள் குறித்து காட்சி வழி விளக்கம் மற்றும் காணொலி காட்சிகள்
மூலமாக மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நெகிழி பைகளுக்கு மாற்றாக
பயன்படுத்தும் வகையில், ஸ்ரீசங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர்
கல்லூரி சார்பாக வழங்கப்பட்ட 1,050 மஞ்சப்பைகள் அனைத்து மாணவியர்,
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுகாதார கல்வி அலுவலர் முனைவர் டி.ஜி.சீனிவாசன்,
எக்ஸ்னோரா திரு.கோவிந்தராஜ், பசுமைப்படை திரு.தங்கராஜ், எஸ்.எஸ்.
ஜெயின் கல்லூரி உதவிப் பேராசிரியர் சாந்தினி மற்றும் தலைமையாசிரியை
தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






