விலையும் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி – கம்பு மகசூல் 50% அதிகரிப்பு…

பரவலாக மழையால் பெய்ததால், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் வழக்கத்தை விட இந்த ஆண்டு கம்பு மகசூல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், விலையும் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், வேப்பனப்பள்ளி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சூளகிரி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மானாவாரி நிலங்களில் கம்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கம்புக்கு விதைப்பு முதல் அறுவடை வரை தண்ணீர் இருந்தால்போதும் என்பதால், விவசாயிகள் கம்பு சாகுபடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டில் பரவலாக பெய்த மழையால், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் விதைக்கப்பட்ட கம்பு நன்கு விளைந்து தற்போது அறுவடை பணி தொடங்கியுள்ளது. .

மேலும், கடந்தாண்டைப்போல நிகழாண்டிலும் 50 சதவீதம் மகசூல் அதிகரித்துள்ளது. தரத்தைப் பொறுத்து விலையும் உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இதுதொடர்பாக சூளகிரி பகுதி விவசாயிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் கம்பு சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணி நடைபெற்று வருகிறது. கம்பு நடவுப் பணியைப் பொறுத்தவரை நீர்ப்பாசன பகுதியில் ஒரு ஏக்கருக்கு 800 கிலோ முதல் ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். மானாவாரியில் 600 கிலோ முதல் 800 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஊட்டச்சத்து மாவு தயாரிப்பு மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் கம்பின் தேவை அதிகம் இருப்பதால், சந்தையில் ஆண்டும் முழுவதும் கம்புக்கு வரவேற்பு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் கம்பை வாங்க வியாபாரிகள், போச்சம்பள்ளி, குந்தாரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி பழையபேட்டை சந்தைக்கு வருகின்றனர்.

மேலும், சில வியாபாரிகள் விவசாயிகளின் தோட்டத்துக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர்.

கடந்தாண்டு ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.30-க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் தரத்தைப் பொறுத்து கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை கொள்முதல் செய்கின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.