பெலாரஸுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பிவைப்பு – ரஷ்ய அதிபர் புதின்….

உக்ரைன் போரில் தேவைப்படும்போது பயன்படுத்த ஏதுவாக முதல் தொகுதி அணு ஆயுதங்கள் நட்பு நாடான பெலாரஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார..

கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இந்தப் போர் நீடித்து வருகிறது. அவ்வப்போது தாக்குதல்களை இருதரப்பும் தீவிரப்படுத்துகின்றன. அந்த வகையில் அண்மையில், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையான கக்கோவ்காவை ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக சில நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டப்பட்டது. அணையிலிருந்து பெருமளவு தண்ணீர் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். அணை தகர்ப்பு தொடர்பாக ரஷ்யா – உக்ரைன் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பொருளாதார கூட்டமைப்பில் உரையாற்றிய அதிபர் புதின், முதல் தொகுதி அணு ஆயுதங்கள் நட்பு நாடான பெலாரஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகக் கூறினார்.

அந்நிகழ்ச்சியில் புதின் பேசுகையில், “இப்போதைக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அவசியம் இல்லை என்று கருதுகிறேன். ரஷ்யாவின் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும்போது மட்டுமே இது பயன்படுத்தப்படும்.

இருப்பினும் பெலராஸ் நாட்டுக்கு முதல் தொகுதி அணு ஆயுதங்களை அனுப்பிவைத்துள்ளோம். முழுமையாக இந்தக் கோடை முடிவதற்குள் அனுப்பிவைப்போம். பெலாரஸுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேற்குலகுக்கு ஒருவித எச்சரிக்கை. அவர்கள் ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளட்டும். உக்ரைனில் இதுவரை ரஷ்யப் படைகள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. ஆனால் உக்ரைன் படைகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. ரஷ்யப் படைகளை எதிர்கொள்ளும் சக்தி அவர்களுக்கு இல்லை” என்றார்.

பெலாரஸ் நமது நட்பு நாடு. 2022 -ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீதான முதல் தாக்குதல் தொடங்கப்பட்ட பின்னர் பெலராஸில் உள்ள ஏவுதளத்தை ரஷ்யா முக்கியமான தளமாகப் பயன்படுத்தி ஏவுகணைகளை ஏவி வருகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.