அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

மகளிர் சுய உதவி குழு நடத்தி பொதுமக்களிடம் பண மோசடி…..

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சித்தரேவு வசித்து வரும் முத்துலட்சுமி என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விஜி (எ) விஜயகுமார் மற்றும் அருண்பாண்டி ஆகியோர் எங்களுக்கு தெரிந்த நபர் மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வருவதாகவும் ஒவ்வொரு மகளிருக்கும் தலா 1,00,000 ரூபாய் லோன் வாங்கித் தருவதாகவும் தொடர்ந்து கூறி வந்தார். இதன் அடிப்படையில் நான் எங்கள் ஊரைச்சேர்ந்த எ.பாப்பாத்தி, சி.பூச்சியம்மாள் ஆகியோரையும் சேர்த்து விஜி (எ) விஜயகுமார் மற்றும் அருண்பாண்டி சொன்ன மகளிர் சுய உதவிக்குழுவில் லோன் பெறுவதற்காக எங்களது போட்டோ, ஆதார்கார்டு, ரேஷன்கார்டு போன்றவற்றை விஜி (எ) விஜயகுமாரிடம் கொடுத்தோம். விஜயகுமார் லோன் பெறுவதற்கு முன்பு காந்திகிராமத்தில் உள்ள கனரா வங்கியின் மேலாளர் எனது நண்பர் அவரது வங்கியில் வங்கிக்கணக்கு முதலில் தொடங்க வேண்டும். அதன் பின்பாக அந்த வங்கி கணக்கின் வழியாக லோன் வாங்கித் தருகிறேன் விஜி (எ) விஜயகுமார் மற்றும் அருண்பாண்டி ஆகியோர் எங்களிடம் உறுதி அளித்தார்கள்.ஒரு மாதம் கழித்து விஜி (எ) விஜயகுமார் மற்றும் அருண்பாண்டி ஆகியோர் எங்களை காந்திகிராமம் கனரா வங்கிக்கு வரச்சொல்லி அமுதா க.பெ.அறிவழகன் மணீஷ் டிரஸ்ட் நிர்வாகி என்பவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் அமுதா தான் மகளிர் சுய உதவிக்குழுவின் தலைவியாக செயல்பட்டு வருகிறார் என்று கூறினார். பின்பு எங்கள் நால்வருடன் சேர்த்து இன்னும் ஆறு பேருடன் மொத்தமாக பத்து நபர் கொண்ட குழுவாக வங்கியில் வைத்து போட்டோ ஒன்று விஜி (எ) விஜயகுமாரும், அமுதாவும் எடுத்தார்கள். பின்பு வங்கியின் மேலாளரிடம் எங்கள் பத்து பேரையும் அழைத்து சென்றார்கள். அப்போது வங்கி மேலாளர் கையொப்பமிட்டு இன்று செல்லுங்கள், ஒரு வார காலத்தில் வங்கி கணக்கு புத்தகமும், லோன் தொகையும் வந்து விடும் என்று உறுதி அளித்தார். சிறிது நேரம் கழித்து விஜயகுமாரும் அமுதாவும். எங்களிடம் இப்போதைக்கு நீங்கள் யாரும் கையொப்பம் எதுவும் போட வேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம். உங்கள் அனைவருக்கும் எங்களது நண்பரான வங்கி மேலாளர் சொன்னது போல் இன்னும் ஒரு வார காலத்தில் வங்கி கணக்கு புத்தகமும் ,லோன் தொகையும் வந்துவிடும் என்று கூறி எங்களை அனுப்பி விட்டார்கள். அவர்கள் சொன்னது போல் ஒரு வாரம் கழித்து விஜயகுமார். அருண்பாண்டி மற்றும் அமுதாவை தொடர்பு கொண்டு லோன் குறித்து கேட்ட போது இன்னும் பத்து நாட்களில் வந்துவிடும் என்று கூறினார்கள். அவர்கள் சொன்னது போல் பத்து நாட்கள் கழித்து நாங்கள் விஜி (எ) விஜயகுமார்,அருண்பாண்டி மற்றும் அமுதாவை தொடர்பு கொண்டு லோன் குறித்து கேட்ட போது ஒரு மாதம் கழித்து வந்துவிடும் என்று கூறினார்கள். பின்பு அவர்கள் சொன்னது போல ஒரு மாதம் கழித்து கேட்ட போது இன்று வந்து விடும் நாளை வந்து விடும் என்று சாக்கு போக்கு சொல்லி காலம் கடத்தி வந்தனர். பின்பு இரண்டு மாதங்கள் கழித்து விஜி (எ) விஜயகுமார், அருண்பாண்டி மற்றும் அமுதாவை நாங்கள் நேரில் சந்தித்து லோன் குறித்து கேட்ட போது உங்களது லோன் ரத்து செய்யப்பட்டு விட்டது. அதனால் உங்கள் யாருக்கும் வங்கிக்கணக்கு புத்தகமும் தொடங்கவில்லை. லோன் தொகையும் வராது என்று கூறி அனுப்பி விட்டார்கள்.அதன் பின்பாக கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வத்தலக்குண்டில் ஐடிஎஃப்சி வங்கியில் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு விண்ணப்பிக்க நாங்கள் மூவரும் சென்றோம். அப்போது ஐடிஎஃப்சி வங்கியில் நீங்கள் மூவரும் இன்னும் ஏழு நபருடன் சேர்ந்து மொத்தம் பத்து நபர்கள் 8,00,000 ரூபாய் பணம் காந்திகிராமம் கனரா வங்கி கிளையில் ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே மகளிர் சுய உதவிக்குழுவில் லோன் வாங்கி விட்டீர்கள் என்று கூறி வங்கியில் எங்களது லோன் விண்ணப்பத்தை ரத்து செய்து விட்டார்கள். அதன் பின்பாக நாங்கள் காந்திகிராமத்தில் உள்ள கனரா வங்கிக்கு சென்று வங்கி மேலாளரிடம் இது குறித்து கேட்ட போது அவர் உங்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு புத்தகம் தொடங்கபட்டு ஏழு மாதங்களுக்கு முன்பு லோன் தொகையும் வழங்கப்பட்டு விட்டது என்றும், உங்களது லோன் தொகை உங்களது குழுவின் தலைவியான அமுதா க.பெ.அறிவழகன் என்பவரது வங்கிக்கணக்கில் நீங்கள் சொன்னதின் பேரில் ரூ 8,00,000 பணத்தை மாற்றி விட்டேன் என்பதையும் தெரிவித்தார். இதையறிந்து நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்.இது குறித்து விஜி (எ) விஜயகுமார் மற்றும் அமுதா ஆகியோரிடம் கேட்ட போது உங்களது பெயரில் வங்கி கணக்கு எதுவும் நாங்கள் தொடங்கவில்லை. லோன் தொகை எதுவும் நாங்கள் பெறவில்லை என்று கூறி விட்டார்கள். இதன் பின்பு தான் நாங்கள் யாரும் வங்கிகணக்குக்கு விண்ணப்பிக்காமல் கையொப்பம் எதுவும் போடாமல் எங்களது கையொப்பத்தை மற்றும் கைரேகையை போலியாக போட்டு வங்கி கணக்கு புத்தகம் தொடங்கி போலியாக எங்களது பெயரில் லோன் தொகையை விஜி (எ) விஜயகுமாரும், அருண்பாண்டியும், அமுதாவும் பெற்றிருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. மேலும் எங்களது லோன் தொகையானது கடந்த 20.06.2022ந் தேதி அமுதா என்பவரின் வங்கிக் கணக்குக்கு பணம் மாற்றப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.எனவே எங்களது கையொப்பத்தை போலியாக போட்டு எங்களிடம் லோன் வாங்கித்தருவதாக நம்ப வைத்து எங்களை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்து எங்களுக்கே தெரியாமல் எங்களது பெயரில் வங்கி கணக்கு தொடங்கி மோசடியாக எங்களது கையொப்பம் மற்றும் கைரேகையை போலியாக போட்டு லோன் தொகை பெற்ற விஜி (எ) விஜயகுமார்,அருண்பாண்டி, அமுதா மற்றும் இதற்கு முழு உடந்தையாக இருந்த காந்திகிராமம் கனரா வங்கி மேலாளர் ஆகியோர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டுத் தருமாறு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளோம் என தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

மகளிர் சுய உதவி குழு நடத்தி பொதுமக்களிடம் பண மோசடி…..

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர