திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த திருமால் நகரில் சில தினங்களாக இரண்டு குரங்குகள் சுற்றி திரிந்து வந்தது. இந்த நிலையில் அந்த குரங்குகளை அப்பகுதியில் உள்ள நாய்கள் துரத்தி கடித்து குதறியதால் இரண்டு குரங்குகளும் உயிரிழந்தன.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மனிதர்களுக்கு செய்வது போல் பாடை கட்டியும் மாலை அணிவித்து , ஒப்பாரி வைத்து, பறையடித்தும், ஈமச்சடங்கு செய்தனர்
மேலும் அந்த இரண்டு குரங்குகளையும் திருமால் நகரில் உள்ள சுற்றுக் கோவிலுக்கு அருகே புதைக்கப்பட்டது.







