தமிழகத்தில் இஞ்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன….

கேரளா, குடகு பகுதிகளில் இஞ்சி அறுவடை முடிவை எட்டியிருப்பதால் தமிழகத்தில் இஞ்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

உணவுகள் தயாரிப்பில் இஞ்சி முக்கிய இடம் வகிக்கிறது. அதேபோல, தேநீர் கடைகளில் தினந்தோறும் விற்பனையாகும் சமோசா, பப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் தயாரிப்பிலும் இஞ்சி முக்கிய இடம் பெறுகிறது. மேலும், சில கடைகளில் இஞ்சி டீ தயாரிப்பின்போதும் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, கரும்புச் சாறு விற்பனை செய்யும் கடைகளில் இயந்திரத்தில் கரும்பை அரைத்து சாறு பிழியும்போது கரும்புடன் எலுமிச்சை, இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்தே அரைத்து சாறெடுக்கின்றனர். கரும்புச் சாறின் சுவையை மேலும் கூட்டும் வகையில் இவ்வாறு இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் அன்றாட உணவு தேவையாக மற்றும் பலகாரங்கள் தயாரிப்பின்போதும், உணவு சார்ந்த வர்த்தக மையங்களிலும் அதிக அளவில் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இஞ்சியின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் தருமபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் 1 கிலோ இஞ்சியின் விலை ரூ.100 என்ற நிலையில் இருந்தது. தொடர்ந்து படிப்படியாக கடும் விலை உயர்வு ஏற்பட்டு ஏப்ரல் 2-வது வாரத்தில் 1 கிலோ இஞ்சியின் ரூ.200 என்ற விலையில் விற்பனையாகிறது.

தற்போது இஞ்சி விலை சீராக உயர்ந்து வருகிறது. நேற்று (17-ம் தேதி) தருமபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் 1 கிலோ இஞ்சி ரூ.218-க்கு விற்பனையானது. உழவர் சந்தையின் விலையை விட தனியார் காய்கறிக் கடைகளில் கிலோவுக்கு ரூ.30 வரை விலை கூடுதலாகவே விற்பனையாகிறது. இஞ்சி சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் அறுவடை முடிவை எட்டியிருப்பதால் இவ்வாறு விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்லபடுகிறது.

இதுகுறித்து, தருமபுரியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர் கூறியது: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு கேரளாவில் இருந்தும், கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் இருந்தும் தான் இஞ்சி சப்ளை ஆகிறது. குடகு பகுதியில் விளையும் இஞ்சி பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் வந்து சேர்கிறது. இஞ்சியாக பயன்படுத்த 6 மாதத்தில் அறுவடை செய்து விடுவார்கள். சுக்கு தயாரிக்கும் தேவைக்கு பயன்படுத்த இஞ்சியை நடவு செய்ததில் இருந்து 8 மாதங்கள் கழித்தே அறுவடை செய்வார்கள்.

கேரளா, குடகு ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இஞ்சியின் அறுவடை தற்போது முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. எனவே, கடந்த சில வாரங்களாக இஞ்சியின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. முன்பெல்லாம் காய்கறி வாங்க வரும் வாடிக்கையாளர்கள் காய்கறிகளுடன் 10 ரூபாய்க்கு இஞ்சி கேட்டு வாங்கிச் செல்வர். தற்போது ரூ.10-க்கு இஞ்சி கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு இஞ்சி தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 100 கிராம் இஞ்சியே ரூ.22 என்ற நிலையை எட்டி விட்டது. இன்னும் ஓரிரு மாதத்துக்கு இஞ்சி விலை உச்சத்தில் தான் இருக்கும் என்று செல்லபடுகிறது. அதன் பிறகு மீண்டும் இஞ்சி அறுவடை தொடங்கி, அதன் வரத்து அதிகமாகும்போது விலை படிப்படியாகக் குறையத் வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்