தமிழகம் முழுவதும் கடந்த மாதம் மது விற்பனை 5 சதவீதம் குறைந்தது; போலி மது விற்பனை காரணமா?

சென்னை:
டாஸ்மாக் மதுக்கடைகளில் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை காலங்களில் ரூ.1000 கோடிக்கு மேல் மது விற்பனை நடந்தது. தினமும் ரூ.180 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்று வந்தது. மதுபார்கள் முழுமையான அளவில் செயல்படாத நிலையிலும் மதுவிற்பனை குறையவில்லை. ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழகம் முழுவதும் மது விற்பனை குறைந்து உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் மதுவிற்பனை சற்று குறைந்துள்ளது.
சென்னையில் 3 சதவீதம் மது விற்பனை குறைந்து இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியை ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை பாதியாக குறைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 10 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது.
இதேபோல பெரும்பாலான மாவட்டங்களில் மது விற்பனை குறைந்துள்ளதால் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர். மாவட்ட மேலாளர்கள் கடை பணியாளர்களிடம் விற்பனை குறைவுக்கான காரணம் குறித்து விளக்கம் கேட்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் போலி மது விற்பனை நடைபெறுவதால் டாஸ்மாக் விற்பனை சரிவுக்கு காரணம் என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையில் மது விற்பனை குறைவுக்கான காரணம் என்ன? என்பது பற்றி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400