அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் : அமைச்சர்…

சென்னை: வடசென்னையில் 32 கடைகள், மத்திய சென்னையில் 25 கடைகள், தென் சென்னையில் 25 கடைகள் என மொத்தம் 82 நியாய விலைக் கடைகளில் நாளை (ஜூலை 4) முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தக்காளி விலை ரூ.140-ஐ எட்டியுள்ள நிலையில், பண்ணை பசுமைக் கடைகளுடன், தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது தொடர்பாக, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தக்காளி விலையை குறைப்பதற்கும், மேலும் விலை அதிகரிக்காமல் இருப்பதற்கான ஆக்கபூர்வமான பணிகளை துறையின் அலுவலர்களுடன் கலந்துபேசி, உரிய நடவடிக்கைகளை முதல்வரின் ஆலோசனையைப் பெற்று செயல்படுத்தி வருகிறோம்.

ஏற்கெனவே நடந்த ஆய்வுக்கூட்டத்திலும், விலையேற்றத்தைக் குறைக்கவும், தக்காளியை வாங்கி பயன்படுத்தும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு, தமிழகத்தில் இருக்கக்கூடிய 62 பண்ணை பசுமை கடைகளில் வழக்கத்தைவிட கூடுதலாக கொள்முதலை அதிகரித்து மக்களுக்கு தக்காளியை விற்பது என முடிவெடுத்து செயல்படுத்தினோம். இதைத் தொடர்ந்து பண்ணை பசுமை கடைகளில் ரூ.60 க்குத்தான் பொதுமக்களுக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வியாபாரிகள் சற்று கூடுதலான விலைக்குத்தான் தக்காளியை விற்பனை செய்து வருகின்றனர். எனவே, விலையேற்றத்தைக் குறைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் இன்று ஆலோசிக்கபட்டது” என்று தெரிவிததார்.

அப்போது, நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தக்காளியை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யலாமா என்று ஒரு யோசனை இருந்தது. அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். முதல்கட்டமாக, சென்னையில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என்று 3 பகுதிகளாகப் பிரித்து, வடசென்னையில் 32 கடைகளிலும், மத்திய சென்னையில் 25 கடைகளிலும், தென் சென்னையில் 25 கடைகள் என மொத்தம் 82 நியாய விலைக்கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனையைத் தொடங்கவிருக்கிறோம்.

இதுமட்டுமின்றி, ஏற்கெனவே சென்னையில் 27 பண்ணை பசுமை கடைகள் உள்ளன.அதிலும் இந்த விற்பனை தொடரும். நகரும் பசுமை பண்ணை வாகனங்கள் 2 என, ஆக மொத்தம் சென்னையில் நாளை முதல் 111 கடைகளில் இந்த தக்காளி விற்பனை செய்யப்படும். 50 முதல் 100 கிலோ வரை தேவைக்கேற்ப விற்பனை செய்யப்படும்.

பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படும் அதே விலைக்கே நியாய விலைக் கடைகளிலும் தக்காளி விற்கப்படும். சென்னையில் தொடங்கப்படும் இந்த விற்பனை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த 111 கடைகளின் விற்பனையைப் பொருத்து, அனைத்து மாவட்டங்களிலும் எல்லா கடைகளிலும் இல்லாவிட்டாலும்கூட, ஒரு குறிப்பிட்ட சதவீதத்திலான நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை