SC / ST மாணவர்கள் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம் : வரும் 30ம் தேதி கடைசி நாள்…..

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு என 21 விடுதிகள் உள்ளன. இதில் ஆதிதிராவிடர் பள்ளி மாணவியர் விடுதி-1, கல்லூரி மாணவர் விடுதி-7, கல்லூரி மாணவியர் விடுதி-3, முதுகலை மாணவர் விடுதி-1, முதுகலை மாணவியர் விடுதி-3, ஆராய்ச்சி மாணவர் விடுதி-1, ஆராய்ச்சி மாணவியர் விடுதி-1, தொழிற்பயிற்சி மாணவர் விடுதி-2, தொழிற்பயிற்சி மாணவியர் விடுதி-1 மற்றும் பழங்குடியினர் நல மாணவியர் விடுதி-1 என செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவியர்களும், கல்லூரி விடுதியில் பட்டப் படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளும் இவற்றில் சேரத் தகுதியுடையவர்கள்.

எவ்வித செலவினமும் இல்லாமல் அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும். ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாணவர்கள் இணைய வழியில் https://tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் புதுப்பித்தல் விண்ணப்பத்தினை இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையில் காலியிடம் இருக்கும் நேர்வில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பள்ளி மாணவர்கள் விடுதிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 30ம் தேதி கடைசி நாள். கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே சென்னை மாவட்டத்தில் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் அரசின் சலுகைகளை பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்