சட்ட ஆணையத் தலைவருக்கு திருமாவளவன் கடிதம்..

பொது சிவில் சட்டம் பழங்குடி சமூகங்களுக்கும் அச்சுறுத்தும் வைகையில் உள்ளது என்று இந்திய சட்ட ஆணையத் தலைவருக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக கடிதத்தில் திருமாவளவன் கூறியிருப்பதாவது: 2018-ல் வெளியிடப்பட்ட சட்ட ஆணையத்தின் அறிக்கையில், பொது சிவில் சட்டத்துக்கு அவசியமில்லை என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் பொது சிவில் சட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

இந்த சட்டம் பழங்குடி சமூகங்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முயற்சியில், அடிப்படை உரிமைகளையும், அரசியலமைப்பு உறுதிசெய்துள்ள மதச் சார்பின்மை கொள்கைகளையும் அரசு மீறுகிறது.

இந்த சட்ட வரம்பிலிருந்து கிறிஸ்தவர்கள் மற்றும் சில பழங்குடியினப் பிரிவினருக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால், பொது சிவில் சட்டத்தின் நோக்கம் குறித்தே கேள்வி எழுகிறது.

தனி நபர் சட்டங்களின் கீழ் பாகுபாடுகளை சரி செய்வது மிக முக்கியம். பெரும்பான்மை மதமான இந்து மதத்தில் நிலவும் பாரபட்சமான நடைமுறைகளை ஒழிக்க, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து கோயில்களில் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு இயற்றிய சட்டம், நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டிய முக்கியமான எடுத்துக்காட்டு. பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவதைவிட, இதுபோன்ற நடவடிக்கைகளே மிக முக்கியமானவை.

சட்டமேதை டாக்டர்.B.R.அம்பேத்கர் மீது இந்த அரசுக்கு மரியாதை இருந்தால், இந்து மதத்தின் அனைத்து சாதியினருக்குமான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். பொது சிவில் சட்டம் தொடர்பான இந்தக் கவலைகள் மற்றும் ஆட்சேபத்தை, இந்திய சட்ட ஆணையம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்.

நமது சமூகத்தின் பன்முகத்தன்மையை மதிக்கும் முற்போக்கான சீர்திருத்தங்களை ஊக்குவிக்கும் அதேநேரத்தில், தனி நபர் சட்டங்களைப் பாதுகாப்பது சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும், சமூகநீதிக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் அவசியாகும். இவ்வாறு திருமாவளவன் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.