அதிமுக நிர்வாகிகள் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு – கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.34.16 லட்சம் கையாடல்….

ஈரோடு மாவட்டம் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.34.16 லட்சம் கையாடல் செய்து தலைமறைவான அதிமுக நிர்வாகிகள் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர். ஈரோடு மாவட்டம் கோபி கூட்டுறவு சொசைட்டி துணை பதிவாளர் கந்தராஜா கடந்த 15ம் தேதி ஈரோடு மாவட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் கோபியில் ஏ.ஏ.533 ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2018 ஏப்ரல் 1 முதல் 2021 அக்டோபர் 29ம் தேதி வரை நடந்த வரவு செலவுகளின் உண்மை தன்மையை கண்டறிய ஆய்வு செய்யப்பட்டது. இதில் சங்க துணை விதிகளுக்கு முரணாக, ரூ.34 லட்சத்து 16 ஆயிரத்து 295ஐ கையாடல் மற்றும் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுருத்தியிருந்தனர்.

அதன்பேரில், ஈரோடு வணிக குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த சங்கத்தின் முன்னாள் தலைவரான அதிமுக நிர்வாகி ஈஸ்வரமூர்த்தி 48, முன்னாள் துணை தலைவர் அதிமுக நிர்வாகி பாலசுப்பிரமணியம் 46, சங்க செயலாளர் கோபி குள்ளம்பாளையம் மோகன் 52, துணை செயலாளர் ராஜகோபால் 56, சங்க எழுத்தர்களான சிவக்குமார் 46, வரதராசு 44, காசாளர் சோமசுந்தரம் 59 ஆகியோர் ரூ.34.16 லட்சத்தை மோசடி செய்ததுள்ளதாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 7 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் சோமசுந்தரம் இறந்துவிட்டார். மற்ற 6 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ.மீனாட்சி சுந்தரம் அவர்களின் வீர தீரச் செயலைப் பாராட்டி 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய முதலமைச்சர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!