அமெரிக்க அதிபர் தேர்தல்…டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை…!

அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பல சுற்றுகள், பல மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் களம் மாறலாம்.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் இருக்கின்றன. இவற்றில் 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்பார்.

அதிகபட்சமாக கலிபோர்னியா மாகாணத்திற்கு 54 வாக்குகள் உள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு மாகாணத்தில் எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளை பெறுகிறாரோ, அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும்.

அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின், வடக்கு கரோலினா ஆகியவை ஸ்விங் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது, கமலா ஹாரிஸ், டொனால்ட் ட்ரம்ப் இடையில் போட்டி கடினமாக இருக்கும். வெற்றி வாய்ப்பு என்பதை கணிப்பதை சிரமம்.

வாக்கு எண்ணிக்கை: இந்நிலையில் இன்று (நவம்பர் 6) காலை 6 மணி நிலவரப்படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றிருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் 19 மாகாணங்களிலும், கமலா ஹாரிஸ் 3 மாகாணங்களிலும் முன்னிலை இருக்கின்றனர். ட்ரம்ப் இன்டியானா, கென்டக்கி, மேற்கு விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் வெற்றி பெற்றுவிட்டார்.

ட்ரம்ப் முன்னிலை: இதில் இண்டியானா மாகாணத்தில் 11 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும், கென்டக்கியில் 8 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும், மேற்கு விர்ஜினியாவில் 4 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் இருக்கின்றன. தெற்கு கரோலினா, ஜார்ஜியா, ப்ளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில் முன்னிலை பெற்றுள்ளார்.

கமலா ஹாரிஸ் வெற்றி: அதுவே கமலா ஹாரிஸை எடுத்து கொண்டால் வெர்மண்ட் மாகாணத்தில் வெற்றி பெற்றுவிட்டார். விர்ஜினியா, நியூ ஹாம்ஸ்ஷைர் உள்ளிட்ட மாகாணங்களில் முன்னிலை வகிக்கிறார். இதுவரை பெற்ற வாக்குகள் அடிப்படையில் பார்க்கும் போது டொனால்ட் ட்ரம்ப் 46,71,232 வாக்குகளும் (54.6 சதவீதம்), கமலா ஹாரிஸ் 38,16,312 வாக்குகளும் (44.6 சதவீதம்) பெற்றிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல்…டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை…!

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube