அம்மா உணவகத்தை துணை மேயர் மு. மகேஷ்குமார் திடீர் ஆய்வு….

பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம் மற்றும் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வார்டு-141, 142, 169, 170க்குட்பட்ட 6 அம்மா உணவகங்களின் செயல்பாடுகளை துணை மேயர் .மு. மகேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரையுள்ள 200 வார்டுகளில் தற்போது 393 உணவகங்களும், நோயாளிகள் மற்றும் அவர்களின் துணை வருபவர்கள் பயன்பெறும் வகையில் 7 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. அம்மா உணவகங்கள் மூலமாக 01.04.2022 முதல் 31.03.2023 வரை 6.70 கோடி இட்லிகளும், 1.53 கோடி பலவகை சாதங்களும், 2.65 கோடி சப்பாத்திகளும் விற்பனை செய்யப்பட்டதன் விளைவாக 5.3 கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளனர். 2022-23 ஆம் நிதியாண்டில் விற்பனை தொகையை (ரூ.15.81 கோடி) விட செலவினத் தொகை (ரூ.97.86 கோடி) அதிகமாக அதாவது ரூ.82.05 கோடி அதிகமாக இருந்தாலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேவை மனப்பான்மையோடு ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்ற வண்ணம் செயல்படுத்திட வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி இன்று அனைத்து அம்மா உணவகங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இச்செலவீனத் தொகை முழுவதும் பெருநகர சென்னை மாநகராட்சி செலவினங்களில் இருந்து மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. கட்டுமான தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திலேயே பசியாறும் பொருட்டு தொடங்கப்பட்ட நடமாடும் அம்மா உணவகம் என்னும் திட்டத்தில் ஒரு வட்டாரத்திற்கு ஒரு வாகனம் வீதம் மூன்று வாகனங்கள் மூலம் திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் 1,09,959 கட்டுமானத் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் அம்மா உணவாக சீரமைப்பு பணிகளுக்காக சென்ற ஆண்டை காட்டிலும் 4.5 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்து (மொத்தம் 9 கோடி), மண்டல அளவிலேயே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக துணை மேயர் மு.மகேஷ்குமார் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, கோடம்பாக்கம் மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, நியமனக் குழு உறுப்பினர் ஜா அன்பழகன், மாமன்ற உறுப்பினர் கே.ஆர்.கதிர்முருகன், மண்டல அலுவலர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube