அம்மா உணவகத்தை துணை மேயர் மு. மகேஷ்குமார் திடீர் ஆய்வு….

பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம் மற்றும் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வார்டு-141, 142, 169, 170க்குட்பட்ட 6 அம்மா உணவகங்களின் செயல்பாடுகளை துணை மேயர்
.மு. மகேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரையுள்ள 200 வார்டுகளில் தற்போது 393 உணவகங்களும், நோயாளிகள் மற்றும் அவர்களின் துணை வருபவர்கள் பயன்பெறும் வகையில் 7 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.
அம்மா உணவகங்கள் மூலமாக 01.04.2022 முதல் 31.03.2023 வரை 6.70 கோடி இட்லிகளும், 1.53 கோடி பலவகை சாதங்களும், 2.65 கோடி சப்பாத்திகளும் விற்பனை செய்யப்பட்டதன் விளைவாக 5.3 கோடி
பயனாளிகள் பயனடைந்துள்ளனர். 2022-23 ஆம் நிதியாண்டில் விற்பனை தொகையை (ரூ.15.81 கோடி)
விட செலவினத் தொகை (ரூ.97.86 கோடி) அதிகமாக அதாவது ரூ.82.05 கோடி அதிகமாக இருந்தாலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேவை மனப்பான்மையோடு ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்ற வண்ணம் செயல்படுத்திட வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி இன்று அனைத்து அம்மா உணவகங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இச்செலவீனத் தொகை முழுவதும் பெருநகர சென்னை மாநகராட்சி செலவினங்களில் இருந்து மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. கட்டுமான தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திலேயே பசியாறும் பொருட்டு தொடங்கப்பட்ட நடமாடும் அம்மா உணவகம் என்னும் திட்டத்தில் ஒரு வட்டாரத்திற்கு ஒரு வாகனம் வீதம் மூன்று வாகனங்கள் மூலம் திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் 1,09,959 கட்டுமானத் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் அம்மா உணவாக சீரமைப்பு பணிகளுக்காக சென்ற ஆண்டை காட்டிலும் 4.5 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்து (மொத்தம் 9 கோடி), மண்டல அளவிலேயே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக துணை மேயர் மு.மகேஷ்குமார் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, கோடம்பாக்கம் மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, நியமனக் குழு உறுப்பினர் ஜா அன்பழகன், மாமன்ற உறுப்பினர் கே.ஆர்.கதிர்முருகன், மண்டல அலுவலர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள்
பலர் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65