அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூர், சென்னை சேர்க்கை விண்ணப்பம்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூர், சென்னை – ல் 10.05.2024 முதல் 07.06.2024 வரை சேர்க்கை நடைபெற்று வருகிறது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. பயிற்சி அளிக்கப்படும் தொழிற் பிரிவுகள் விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ.750/- இலவச பஸ் பாஸ், மிதிவண்டி, பாட புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை , மூடு காலணி மற்றும் சிறந்த தொழிற் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் மற்றும் தமிழக அரசு வழங்கும் உயர்கல்வி உதவித்தொகை (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளியில் பயின்ற) மாணவிகளுக்கு ரூ. 1000/- கூடுதலாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் – 5 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50/- நேரில் வர இயலாதவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வ.எண்தொழிற் பிரிவுகள்பயிற்சி காலம்கல்வித் தகுதி
1தையல் தொழிற்நுட்பம் 1 வருடம்8 ஆம் வகுப்பு தேர்ச்சி
2கோபா (NCVT)1 வருடம்10 ஆம் வகுப்பு தேர்ச்சி
3கட்டிடப் பட வரைவாளர்2 வருடம்10 ஆம் வகுப்பு தேர்ச்சி
4Stenography (Tamil & English)1 வருடம்10 ஆம் வகுப்பு தேர்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூர், சென்னை சேர்க்கை விண்ணப்பம்

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்