அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆளுநர் விருப்ப நிதி உயர்வில் விதி மீறல்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

சென்னை:
தமிழக சட்டமன்றத்தில் இன்று பேசிய நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழக ஆளுநருக்கு மூன்று தலைப்புகளில் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஒன்று செயலகம், இரண்டு வீட்டு செலவு, மூன்று விருப்ப நிதி. செயலக நிதியை பொறுத்தவரை 2 கோடியே 41 லட்சமாக இருந்த நிதி ஒதுக்கீட்டை கடந்த ஆண்டு 2 கோடியே 82 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. நடப்பாண்டு 3 கோடி 63 லட்ச ரூபாயாக அதிகரித்துள்ளோம்.
இதேபோல் ஆளுநரின் வீட்டு வசதி செலவீனத்திற்கு 11 கோடி 60 லட்சமாக இருந்ததை கடந்த ஆண்டு 15 கோடி 93 லட்சமாகவும், நடப்பாண்டு 16 கோடி 69 லட்சமாகவும் அதிகரித்திருக்கிறோம். ஆளுநர் மாளிகைக்கான விருப்ப நிதி ஒதுக்கீடு என்பது 1937ல் அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் 2011-12ல் 8 லட்ச ரூபாயாக இருந்தது. 2016-17ல் 5 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது.
2018-19ல் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ரூபாயாக குறைத்தனர். அடுத்த மூன்று மாதங்களில் 50 லட்சமாகவும், பின்னர் 5 கோடி ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் மருத்துவ சேவை, திருமண உதவி, வாழ்வாதாரம், தகுதி வாய்ந்த தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஆளுநர் தனது விருப்ப நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகையை நிதி ஒதுக்கலாம். இதுதான் விதிமுறை.
ஆளுநரின் விருப்ப நிதி லட்சங்களில் இருந்த போது எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதில் இருந்து விதிமீறல்கள் தொடங்கிவிட்டன. இதற்கு முன்பு நான் அவையில் கூறிய போது ஆளுநரின் விருப்ப நிதியில் இருந்து அட்சய பாத்திரா திட்டத்திற்கு 2 கோடி ரூபாய், 2 கோடி ரூபாய் என அடுத்தடுத்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தேன். அதை தற்போது திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.
ஏனெனில் அட்சய பாத்திரா என்ற காரணத்தை சொல்லி ஆளுநரின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்றி, அதன்பின்னரே குறிப்பிட்ட நிதியை மட்டும் மாற்றியுள்ளனர். எஞ்சிய நிதியை வேறு சிலவற்றுக்கு மாற்றம் செய்துள்ளனர். ஆளுநர் மாளிகையின் மொத்த செலவு 18 கோடியே 38 லட்ச ரூபாய். இதில் 11 கோடி 32 லட்ச ரூபாய் அவர்கள் கணக்கிற்கு மாற்றப்பட்டு எங்கே செலவிடப்பட்டது என்று தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை
இது விதிமுறை மீறல். விருப்ப நிதியை பொறுத்தவரை அனைத்து மாநிலங்களிலும் மிகவும் குறைவாக தான் நிதி வழங்குகின்றனர். உதாரணமாக கர்நாடகாவில் 25 லட்ச ரூபாய், கேரளாவில் 25 லட்ச ரூபாய், மேற்கு வங்கத்தில் 25 லட்ச ரூபாய், உத்தரப் பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2021க்கு பிறகு வந்த தமிழக ஆளுநர் மாளிகை செலவீனக் கணக்குகளை பார்த்தால், யு.பி.எஸ்.சி மாணவர்கள் கூட்டம் 5 லட்ச ரூபாய், தேநீர் விருந்து 30 லட்ச ரூபாய், ராஜ் பவன் ஊட்டியில் கலாச்சார நிகழ்வு 3 லட்ச ரூபாய் எனக் கூறப்பட்டுள்ளது. ஒரே நபருக்கு திரும்ப திரும்ப நிதி ஒதுக்கக் கூடாது என்று நிதித்துறை விதிகளில் இருக்கிறது.
ஆனால் அதை மீறி ஆளுநர் மாளிகை செயல்பட்டுள்ளது. நம்முடைய மாநிலத்தில் தான் அதிக நிதி ஒதுக்கி இவ்வாறு ஆளுநருக்கு மரியாதையும், மதிப்பும் அளித்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை