பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களின் குறைகளை விரைவாக தீர்க்கவும், “நிதி உங்கள் அருகில்”, “சுவிதா சமகம்” என்ற பெயரில் ஒருங்கிணைந்த பொதுமக்கள் தொடர்பு மற்றும் குறைதீர்ப்பு முகாமை மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) அமைப்பும் ஊழியர் அரசு காப்பீட்டுக் கழகமும் (இஎஸ்ஐசி) இணைந்து நடத்துகின்றன.
இந்த முகாம், 2026, ஜூன் 29 அன்று காலை 9:15 மணி முதல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது
தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் இபிஎஃப்ஓ, இஎஸ்ஐசி தொடர்பான கோரிக்கைகள், குறைகள், சந்தேகங்கள் ஆகியவற்றை இந்த முகாமில் நேரடியாக முன்வைத்து தீர்வு காணலாம். இபிஎஃப்ஓ தொடர்பான குறைகளுக்கு, https://t.ly/nPTt என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விவரங்களை பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம்.
முகாம் நடைபெறும் இடங்கள்:
| மதுரை | கப்பலூர் இண்டஸ்ட்ரியலிஸ்ட்ஸ் அசோசியேஷன் கப்பலூர் சிட்கோ, தர்மத்துப்பட்டி, மதுரை – 625008. |
| சிவகங்கை | எம்/எஸ். ஃபர்ஸ்ட் கார்மென்ட் மேனுஃபேக்ச்சரிங் கம்பெனி (1) பிரைவேட் லிமிடெட், எண். 3/68, அரசன்னூர், சிவகங்கை – 630 561 |
| இராமநாதபுரம் | ஃபர்ஸ்ட் கார்மென்ட் மேனுஃபேக்ச்சரிங் கம்பெனி இந்தியா பிரைவேட் லிமிடெட் யூனிட் -V,முதுகுளத்தூர், இராமநாதபுரம் |
| தேனி | சி.என்.எம்.எஸ்.சிவகாமி மெட்ரிக் பள்ளி, பொன்னகர் சாலை, சின்னமனூர், தேனி -625515 |
| விருதுநகர் | ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு மெமோரியல் கல்லூரி, சடையம்பட்டி, சாத்தூர் 626203, |
| திண்டுக்கல் | எம்/எஸ் சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முஞ்சிக்கல், கொடைக்கானல் |







