இடப்பிரச்சினையால் பாதை அடைப்பு: இறந்தவர் உடலை எடுக்க முடியாமல் மகன் தவிப்பு

தாம்பரம்:
இடப்பிரச்சினை காரணமாக பாதை அடைக்கப்பட்டது. இதனால் இறந்த தன் தந்தையின் உடலை எடுத்துவர முடியாமல் மகன் தவித்தார்.
பல்லாவரம், குளத்துமாநகர், வேம்புலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எசேக்கியேல். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக வழிப்பாதை தொடர்பாக பிரச்சினை உள்ளது. கடந்த 4 ஆண்டுக்கு முன்பு எசேக்கியேல் வீட்டுக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு நடந்து செல்லும் வகையில் ஒன்றரை அடி அகலத்தில் மட்டும் சென்று வர வழி ஒதுக்கப்பட்டது. இந்த பாதை வழியாக எசேக்கியேல் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்று வந்தனர்.
இந்த நிலையில் எசேக்கியேலின் தந்தை கிறிஸ்துதாஸ் (73) என்பவர் உடல் நலக்குறைவால் வீட்டில் இறந்தார். அவரது உடலை புதைக்க உறவினர்கள் முடிவு செய்தனர். ஆனால் வழிப்பாதை அடைக்கப்பட்டதால் கிறிஸ்துதாசின் உடலை வெளியில் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது. இது பற்றி எசேக்கியேல் மற்றும் அவரது உறவினர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல்லாவரம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. அப்போது உடலை எடுத்து செல்ல வழி ஏற்படுத்தவில்லை எனில் தந்தையின் உடலை வீட்டிற்குள் புதைக்கப்போவதாக எசேக்கியேல் கூறினார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதற்கிடையே போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடலை எடுத்து செல்லும் வகையில் ஒரு நாள் மட்டும் போதிய அளவில் வழிவிடுமாறு எதிர்தரப்பினரிடம் போலீசார் தெரிவித்தனர். இதனை அவர் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து போதிய வழி ஏற்படுத்தப்பட்டதால் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.