இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ) விண்வெளியில் இரு தனித்தனி விண்கலன்களை ஒன்றாக இணையச் செய்யும் தொழில்நுட்பத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது.அந்த வகையில் இஸ்ரோ இரண்டு சிறிய விண்கலன்களை ஏவும் ஸ்பேடெக்ஸ் திட்டத்துக்காக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட், எஸ்.டி.எக்ஸ்.1, எஸ்.டி.எக்ஸ்.2 என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் சுமந்து சென்றதுஒவ்வொன்றும் தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.
இதன் மூலம் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் விண்வெளியில் இரு தனித்தனி விண்கலன்களை ஒன்றாக இணையச் செய்யும் தொழில்நுட்பத்தை இந்தியா வெற்றி கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் இதுவரை, ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகளின் விண்வெளி அமைப்புகளிடம் மட்டுமே உள்ளது. நான்காவதாக இந்தியாவின் இஸ்ரோ அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.என்கிற தகவலை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube