உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்…

மாலை வேளைகளில் சூடான தேனீருக்கு சூப்பரான காமினேஷன் உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ். இந்த ஸ்நாக்ஸ் எவ்வாறு செய்வது என்பதை பார்க்கலாம். தேவையான பொருள்கள்: உருளைக்கிழங்கு – 4 ரவை -1 கப் கறிவேப்பிலை – தேவையான அளவு கொத்தமல்லி இலை – தேவையான அளவு பச்சை மிளகாய் – 4 வெங்காயம் – 2 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இது ஒரு ஸ்நாக்ஸ் என்பதால் சாப்பிடும் போது வாயில் அகப்படக்கூடாது. பின்னர் ஒரு பவுளை எடுத்து அதில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, அதற்கு தேவையான உப்பு மற்றும் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக நீரை கொதிக்க விட வேண்டும். கொதித்துக் கொண்டிருக்கும் போது அதில் சளித்து வைத்திருக்கும் ரவையை சேர்த்து கிளற ஆரம்பிக்க வேண்டும். கிளறும்போது போது கட்டி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். பின்னர் அந்த மாவுக்கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வேகவைத்த தோலுரித்த உருளைக்கிழங்கை நன்றாக் மசித்து இதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மாவுக்கலவையுடன் வெட்டி வைத்த வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும். இதனை 10 நிமிடத்திற்கு மூடி வைக்க வேண்டும். பின்னர் இந்த மாவுக் கலவையை விரல்கள் போன்று உருட்டி எடுத்து தனியாக ஒரு பிளேட்டில் வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் விரல்கள் போன்று தயார் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு ஃபிங்கர்களை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்க வேண்டும். இப்போது சுவையான உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ் ரெடி.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400