ஏ.ஜே.எம்.பவுண்டேசன் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது…!

கன்னியாகுமரி மாவட்டம் ஏ ஜே எம் பவுண்டேசன் மற்றும் வேணாடு ஹெல்த்கேர் & சேரிட்டபிள் டிரஸ்ட், புத்தேரி பாறையடி இளைஞர்கள் மற்றும் ஆராவமுது உணவகம் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நாகர்கோவில் பாறையடி புத்தேரி அருகில் உள்ள சாம்பவர் சமுதாய நலக்கூடம் அரங்கத்தில் நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு ஏ.ஜே.எம்.பவுண்டேசன் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் மற்றும் வேணாடு ஹெல்த்கேர் & சேரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் பிரவீன் ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். நாகர்கோவில் நீதிமன்ற வழக்கறிஞர் அனிட்டர் ஆல்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பெஜான்சிங் கண் மருத்துவமனை, பென்சாம் மருத்துவமனை மற்றும் டேவிட் பல் மருத்துவமனை மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். கண்பார்வை குறைபாடு, பல் பிரச்சினைகள், சளி, இருமல், காய்ச்சல், இரத்த அழுத்தம், இதய பரிசோதனை மற்றும் நீரிழிவு பரிசோதனைகள் ஆகியவற்றிற்கு இம்முகாமில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். நிர்வாகிகள் ஜான், பெஞ்சமின், ஆனி, ஜெயந்த், சமூக ஆர்வலர்கள் கண்ணதாசன், சதீஷ்குமார், கரிகாலன், அனீஷ் குமார், மணிகண்டன்.சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச