அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐஐடி மெட்ராஸ், 3-வது ஆண்டு ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வுக்குத் தயாராகி வருகிறது

இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ் சங்கமம்’ 3-வது ஆண்டு நிகழ்வை பிப்ரவரி 15-ந் தேதி முதல் பிப்ரவரி 24-ந் தேதி வரை நடத்த தயாராகி வருகிறது.பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களிடையே தொடர்புகளை எளிதாக்குவதன் மூலம், பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய கற்றல் மற்றும் கலாச்சார மையங்கக்கும் இடையிலான கலாச்சார தொடர்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.இந்நிகழ்வில் பங்கேற்போருக்காக ஐந்து பிரிவுகளில் விண்ணப்பங்கள் பின்வரும் இணையமுகப்பு வாயிலாக வரவேற்கப்படுகின்றன – http://kashitamil.iitm.ac.in. பொதுமக்கள் இதில் விண்ணப்பப் பதிவு செய்து கொள்ளலாம்.  இந்நிகழ்வுக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (Banaras Hindu University – BHU) வரவேற்புக் கல்வி நிறுவனமாக செயல்படும்.“தமிழ்நாட்டில் இருந்து ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, சம எண்ணிக்கையில மொத்தம் 1,000 பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், வேளாண் விவசாயிகள், கைவினைஞர்கள், தொழில் வல்லுநர்கள், சிறு தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் பெண்களும், ஆராய்ச்சியாளர்களும் இதில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். அது மட்டுமின்றி, அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து 200 தமிழ் மாணவ-மாணவிகளைக் கொண்ட குழுவினரும் இந்நிகழ்வில் பங்கேற்று வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி போன்ற இடங்களை உள்ளூர் அளவில் பார்வையிடும் வாய்ப்பைப் பெறுவார்கள்” எனக் குறிப்பிட்டார்.இந்த ஆண்டின் சிறப்பம்சமாக, 2025 ஜனவரி 13-ந் தேதி முதல் பிப்ரவரி 26-ந் தேதி வரை நடைபெறும் மகா கும்பமேளாவுடன் இணைந்து இந்நிகழ்வு நடைபெறவிருக்கிறது. காசி தமிழ் சங்கமத்தின் பிரதிநிதிகள்  மகா கும்பமேளாவில் ‘ஷாஹி ஸ்நானம்’ எனப்படும் புனித நீராடல் வாய்ப்பைப் பெறுவதுடன், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலிலும் தரிசனம் செய்யவிருக்கின்றனர்.சித்த மருத்துவ முறை (பாரதிய மருத்துவ முறை), பாரம்பரிய தமிழ் இலக்கியம், தேசத்தின் கலாச்சார ஒற்றுமைக்கு அகத்தியர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதுதான் காசி தமிழ் சங்கமத்தின் இந்த ஆண்டுக்கான முக்கிய கருப்பொருளாகும்.அகத்தியர் என்ற ஆளுமையின் பல்வேறு சிறப்பு அம்சங்கள், சுகாதாரம், தத்துவம், அறிவியல், மொழியியல், இலக்கியம், அரசியல், கலாச்சாரம், கலை, குறிப்பாக தமிழ் மற்றும் தமிழ்நாட்டிற்கு அகத்தியர் ஆற்றியுள்ள பங்களிப்புகள் பற்றிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்வின்போது, இத்தலைப்புகளில் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.வாரணாசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உயிரோட்டமான பிணைப்புகளை மீட்டெடுக்கும் வகையில் அரசு சார்பிலான அணுகுமுறையாக, 2022 நவம்பர் 16 முதல் டிசம்பர் 16-ந் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு முதலாவது காசி தமிழ் சங்கமம் நடைபெற்றது. 2023 டிசம்பர் 17 முதல் டிசம்பர் 30 தேதி வரை இதன் இரண்டாவது நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு தமிழ்நாடு, உத்தரப் பிரதேச மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால், தற்போது மூன்றாவது நிகழ்வுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பங்கேற்பாளர்கள், தமிழ்க்கவி சுப்ரமணிய பாரதியாரின் பழங்காலத்து இல்லம், கேதார் காட், காசி மண்டபம் ஆகியவற்றைப் பார்வையிடுவதுடன், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து தமிழ்த் துறையில் கல்வி- இலக்கியம் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

ஐஐடி மெட்ராஸ், 3-வது ஆண்டு ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வுக்குத் தயாராகி வருகிறது

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube