ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை:

*ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது*திண்டுக்கல் அருகே, ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர், தூத்துக்குடியில் உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் தங்கியிருந்து படித்து வருகிறார். இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில், என்ஜினுக்கு அருகில் உள்ள முன்பதிவில்லாத பெட்டியில் அந்த மாணவி ஏறி ஈரோட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.ரயில் விருதுநகர் ரயில் நிலையத்தை அடைந்ததும் வாலிபர் ஒருவர், மாணவி பயணம் செய்த பெட்டியில் ஏறினார். அம்பாத்துரை அருகே ரயில் வந்த போது, அந்த வாலிபர் மாணவியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதைப்பார்த்த சக பயணிகள், ரயில் நிலைய அவசரகட்டுப்பாட்டு எண் 139-ல் தொடர்புகொண்டு இதுகுறித்து புகார் கொடுத்தனர்.இதையடுத்து ரயில் திண்டுக்கல் வந்தபோது மாணவி பயணம் செய்த முன்பதிவில்லாத பெட்டிக்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.விசாரணையில், அந்த வாலிபர் விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் (33) என்பதும், கோவையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. கோவைக்கு செல்வதற்காக ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த போது, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னதாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடும் ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணித்த, கர்ப்பிணி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அனைத்து ரயில்களிலும் பெண்கள் பெட்டியில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், மாணவிக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை:

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube