கரூரில் மாணவனுக்கு கழுத்து அறுப்பு – சக மாணவன் கைது!

கரூர்: கரூர் குளித்தலை அருகே கல்லூரி வாகனத்தில் சென்ற சக மாணவரின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தன் பாலின ஈர்ப்பால் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்த, 20 வயது மாணவர் கரூர் மாவட்டம் புலியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் முசிறியில் இருந்து கல்லூரி வேனில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த 21 வயது மணவர் ஒருவரும், அதே கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதே கல்லூரி வாகனத்தில் சென்று வந்துள்ளார். இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவரும் சரிவர பேசிக்கொள்வதில்லை என தெரிகிறது.

இந்தநிலையில், இன்று இருவரும் கல்லூரி வேனில் கல்லூரிக்கு சென்றுள்ளனர். குளித்தலை அருகே சத்தியமங்கலம் பகுதியில வேன் சென்றுக் கொண்டிருந்தபோது தன்னுடன் பேசுமாறு தொட்டியத்தைச் சேர்ந்த மாணவர் முசிறியைச் சேர்ந்த மாணவரை வற்புறுத்தியுள்ளார். அதற்கு முசிறி மாணவர் எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த தொட்டியம் மாணவர் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த வாழை இலைகள் அறுக்கப் பயன்படுத்தும் சிறிய கத்தியால் முசிறியைச் சேர்ந்த மாணவரின் கழுத்தை அறுத்துள்ளார். வலியால் துடி துடித்த மாணவர் சத்தம்போட, சக மாணவர்கள் தொட்டியத்தைச் சேர்ந்த மாணவரைத் தடுத்து காயம்பட்ட மாணவரை காப்பாற்றியுள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த, மாணவரை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். அம்மாணவருக்கு அங்கு கழுத்துப் பகுதியில் 10 தையல்கள் போடப்பட்டது. பிறகு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குளித்தலை போலீஸார், “தொட்டியத்தைச் சேர்ந்த மாணவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மாணவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படிப்பதுடன், ஒரே வாகனத்தில் சென்று வருவதால் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். தாக்குதல் நடத்திய மாணவர் தன்பாலின ஈர்ப்புடன் பழகி வருவதை அறிந்த காயம்பட்ட மாணவர் அவருடன் பழகுவதை நிறுத்திக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர், தன்னுடன் பேச மறுத்த மாணவரை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சித்துள்ளார்” என்று கூறப்படுகிறது. தன்பாலின ஈர்ப்பால் சக மாணவரை கல்லூரி மாணவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.