பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டம் ஹனூர் அருகேயுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில் கடந்த 15-ம் தேதி அதிகாலையில் மானை வேட்டையாடியதாக அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவரும் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, வனத்துறை அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. கர்நாடக வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் உடல்களும் இறுதி திருப்பலிக்கு பின்னர், அவர்களின் சொந்த கிராமங்களில் அடக்கம் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப் பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரிடம், கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து தமிழக தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக் கூடாது. ஓ.பன்னீர்செல்வம் அல்லது வேறு யாராக இருந்தாலும் இந்த அடிப்படைப் புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள சட்டம் -ஒழுங்கு விவகாரங்களில் என்னால் தலையிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கே உரிய பிரச்சினைகள் உள்ளன. நமது மாநிலத்தை எப்படிக் காப்பது என்பது நமக்குத் தெரியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் தங்கள் பணியைச் செய்யட்டும், நாம் நமது பணியைச் செய்வோம். அவர்களின் நிர்வாகத்தில் தலையிட நான் விரும்பவில்லை. நமது மாநிலத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டியது அவசியம். அவர்கள் தங்கள் பணியைச் செய்ய வேண்டும்; நாம் நமது பணியைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

முதல்-வர் விஜய் அலுவலகம் மாற்றப்படுவது ஏன்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
சென்னை,புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலக கட்டிடத்தில் கடந்த






