“கலாசாரம் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பேச்சு

சென்னை:
சென்னை பல்கலைக்கழகம் நாட்டிற்கு பல தலைவர்களை தந்துள்ளதாக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நீலகிரி வந்தடைந்த அவர் தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைகள் முகாமுக்கு சென்று, பழங்குடி தம்பதி பொம்மன் -& பெள்ளியை சந்தித்தார். பின்னர், நீலகிரியிலிருந்து சென்னை வந்த திரவுபதி முர்முக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், இன்று காலை சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, தமிழகம் வளமான கலாசாரம் மற்றும் நாகரீகத்தை கொண்டது. சென்னை பல்கலைக்கழகம் நாட்டிற்கு பல தலைவர்களை தந்துள்ளது. இன்று பட்டம் பெறும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் என் வாழ்த்துகள்.
சென்னை பல்கலைக்கழகம் மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டுள்ளது. கல்வியை மேம்படுத்துவதில் முன்னோடியாக சென்னை பல்கலைக்கழகம் திகழ்கிறது. பாலின சமத்துவத்திற்கு சிறந்த உதாரணம் சென்னை பல்கலைக்கழகம். டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி உள்ளிட்ட பலர் இங்கு படித்த மாணவர்கள். சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களில் பெண்கள் சிறப்பு வாய்ந்தவர்கள். சரோஜினி நாயுடு உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்துவது பெருமையாக உள்ளது. கலாசார ஆராய்ச்சியை சென்னை பல்கலைக்கழகம் ஊக்குவிக்கிறது. திருக்குறள் நம்மை பல நூற்றாண்டுகளாக வழி நடத்துகிறது. சுப்பிரமணிய பாரதி சொன்னது போல் மந்திரம் கற்போம், என்றார்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்