மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் சென்னை, கிண்டியில், கட்டப்பட்டு திறப்பதற்கு தயாராக உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., பொதுப்பணித் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.சந்திரமோகன், இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு.அரவிந்த், இ.ஆ.ப., மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.சாந்திமலர், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் திரு.சத்தியமூர்த்தி, திரு.ஆயத்தரசு ராஜசேகரன், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி, திரு.துரைராஜ் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.







