தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் குளத்து மாநகர் வேம்புலியம்மன் கோயில் 4 வது தெரு வார்டு 15 ல் சுமார் பதினைந்து நாட்களுக்கு மேலாக சாலையில் அமைக்கப்பட்டுள்ள (சம்ப்) கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்ப்பட்டிருந்தது. இதில் கழிவுநீர் நிரம்பி தேக்கம் அடைந்து தெருவில் வழிந்தோடியது இது அந்த தெரு வழியாக செல்லும் பொதுமக்கள் மாணவ மாணவிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. சுற்று வட்டார பகுதிகளில் தூர்நாற்றம் வீசியது. இதனால் கொடிய நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாம்பரம் மாநகராட்சிக்கு பல முறை தெரியப்படுத்தியும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இந்த தெருவை சேர்ந்த ஒருவர் தன்னார்வலத்தோடு தனது சொந்த செலவில் அடைப்பை சரி செய்தார். இவருக்கு வேம்புலியம்மன் கோயில் 4 வது தெரு மக்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






