கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் அவதி…

கோவில்பட்டி: கழுகுமலை பேரூராட்சி கடந்த 2013-ம் ஆண்டு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டது. இங்குள்ள சமணர் சிற்பங்கள், குடவரை கோயிலான கழுகாசல மூர்த்தி கோயில், மலை மீதுள்ள வெட்டுவான் கோயில் ஆகியவற்றை காண்பதற்காக வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஆனால் சுற்றுலாத்தலத்துக்குரிய எந்தவித மேம்பாடுகளும் ஏற்படுத்தப்படாமல் மிகவும் பின் தங்கிய ஊராகவே கழுகுமலை உள்ளது. கழுகுமலையை பொறுத்தவரை இங்குள்ள மக்கள் தீப்பெட்டி மற்றும் விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 2005-ம் ஆண்டு 20 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. மகப்பேறு அறுவை சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை அரங்கும் ஏற்படுத்தப்பட்டது. இந்த சுகாதார நிலையத்துக்கு உட்பட்டு 6 துணை சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. கழுகுமலையை சுற்றியுள்ள 24 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற இங்கு தான் வருகின்றனர். இந்த மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 மருத்துவர்கள், 5 செவிலியர்கள், மருந்தாளுநர் உள்ளிட்டோர் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 1 மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளனர்.

4 செவிலியர்கள் உள்ளனர். மருந்தாளுநர் பணியிடம் காலியாக உள்ளது. செவிலியர்களே மருந்தாளுநர் பணிகளையும் கூடுதலாக கவனித்து வருகின்றனர். மேலும், இரவு நேர மருத்துவரும் கிடையாது. இதனால் பகலில் சிகிச்சை பெற வரும் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

வாரந்தோறும் செவ்வாய்கிழமை மட்டும் மகப்பேறு மருத்துவர் வருகிறார். மற்ற நேரங்களில் முழுவதுமே அவசர தேவைக்கு கர்ப்பிணிகள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். காலையில் மருத்துவர் தாமதமாக வருவதால் நீரிழிவு நோயாளிகள் சிகிச்சை பெற காத்திருக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

எனவே, கழுகுமலையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவர், தீக்காய நிபுணர், மகப்பேறு மருத்துவர் ஆகிய பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக அறிவித்து, மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மேலும், காலியாக உள்ள மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தமிழ்நாடு அருசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வேண்டுகொள் விடுத்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.