ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்று கொடுத்த பாரா வலுதூக்கும் வீரர் ஜாண்டு குமாரை அவரது இல்லத்தில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சந்தித்து பாராட்டினார்.
அவர் ஆடவர் ஹெவிவெயிட் பிரிவில் 190 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். பீகாரில் நாலந்தா மாவட்டத்தில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஜாண்டுவுக்கு டாக்டர் மாண்டவியா ரூ.10 லட்சம் பரிசளித்தார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சருடனான சந்திப்பு தொடர்பான தனது அனுபவம் குறித்து பேசிய ஜாண்டு குமார், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரை தாம் இன்று சந்தித்ததை கௌரவமாக உணர்வதாக கூறினார்.






