காவரி நீரை பெற்று தர மத்திய அமைச்சரிடம் துரைமுருகன் கோரிக்கை…

சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கான தண்ணீரை உடனடியாக வழங்க கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை விடுத்தார்.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டி டெல்லியில் இன்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும், மேகேதாட்டு அணையினை கட்டக் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனுவினை அவர் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்: “ஜூன் மற்றும் ஜுலை 3ம் தேதி வரை 12.213 டி.எம்.சி அடி தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை 2.993 டி.எம்.சி அடி தண்ணீர் தான் கிடைத்துள்ளது. 9.220 டி.எம்.சி அடி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்துபோய்விடும். ஆகையினால், உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி, கர்நாடக அரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரிய பங்கீட்டு நீரினை உடனடியாக வழங்குவதை உறுதி செய்வது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பொறுப்பாகும். எனவே, மத்திய அரசின் நீர்வளத் துறை அமைச்சர், தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய உரிய பங்கீட்டு நீரினை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர், மத்திய அரசின் இணைச் செயலாளரை அழைத்து இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துடன் கலந்தாலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.