அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

சட்டீஸ்கர்,மிசோரமில் வாக்குப்பதிவு தொடங்கியது…

அய்சால்:
மக்களவை தேர்தலுக்கு முன்பாக 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. சட்டீஸ்கரில் 20 தொகுதிகளில் முதற்கட்டமாகவும், மிசோரமில் 40 தொகுதிகளில் ஒரே கட்டமாகவும் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலுக்கு முன்பாக அரை இறுதி ஆட்டமாக சட்டீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் இன்று தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடக்க உள்ளது. முக்கியமான இத்தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், 5 மாநில தேர்தலின் ஆரம்பமாக சட்டீஸ்கரில் 20 தொகுதிகளில் முதற்கட்டமாகவும், மிசோரமில் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சட்டீஸ்கரில் மட்டும் 2 கட்டமாகவும் (2ம் கட்ட தேர்தல் வரும் 17ம் தேதி) மற்ற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படுகிறது. நக்சல் அச்சுறுத்தல் உள்ளதால் சட்டீஸ்கரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 20 தொகுதிகளில் 5,304 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 12 தொகுதிகளில் உள்ள 600 வாக்குச்சாவடிகள் நக்சல்கள் நடமாட்டமுள்ள பஸ்தார் டிவிசனில் உள்ளன. இங்கு 3 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் 60,000 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில், 40,000 பேர் துணை ராணுவத்தினர். 20,000 பேர் மாநில போலீசார் ஆவர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பிஜாபூர், நாராயண்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் உள்ள 149 வாக்குச்சாவடி மையங்கள் காவல் நிலையம் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் முகாம்களுக்கு அருகில் மாற்றப்பட்டுள்ளன. ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜ இடையே நேரடி போட்டி நிலவும் இம்மாநிலத்தில் முதல்கட்டமாக 20 தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 40 லட்சத்து 78 ஆயிரத்து 681 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் மாலை 3 மணி வரையிலும், பிற பகுதிகளில் மாலை 5 மணி வரையிலும் நடக்கும் என தெரிகிறது.

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் 40 தொகுதிகளில் 1,276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணி வரை நடக்கும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தேர்தல் பணியில் 3,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களோடு துணை ராணுவமும் அதிகளவில் களமிறக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் 30 தொகுதிகள் சர்வதேச எல்லையை ஒட்டி வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 8.57 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

இங்கு ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறி உள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான சோரம் மக்கள் முன்னணி (இசட்பிஎம்) 2ம் இடத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு காங்கிரஸ், பாஜவுடன் முதல் முறையாக ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி களமிறங்கி உள்ளது. 5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய நாளே தேர்தல் முடிவுகள் தெரிவிக்கப்படும்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்