சிதம்பரம் ஓமகுளம் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யவும் சுற்றுலா வாகனங்கள் நான்கு வீதிகளிலும் நிறுத்த தடைசெய்ய கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை

சிதம்பரம் ஓமகுளம் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யவும் சுற்றுலா வாகனங்கள் நான்கு வீதிகளிலும் நிறுத்த தடைசெய்ய கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கைஇது குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர் இன்று 25.03.2026 காலை 11 மணிக்கு சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;-சிதம்பரம் நகரின் மக்கள் தொகை பெருக்கம், நகர விரிவாக்கத்திற்கு முன்னதான காலங்களில் சிதம்பரத்தின் நகருக்கு வெளியே ஓமகுளம் எல்லைபகுதியில் சிதம்பரம் நகர குப்பைகிடங்கானது தெரிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது.தற்போது இப்பகுதி ஆயிரக்கணக்கான வீடுகளும் 15 க்கும் மேற்பட்ட நகர்களுமாக வளர்ச்சியடைந்துள்ளது. குப்பை கிடங்கின் அருகாமையில் ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த வீடுகளில் வசித்துவருகிறனர்.இந்த குப்பை கிடங்கில் நாள்தோரும் நகரின் பல பகுதிகளிலிருந்து குப்பைகள் மலை போல அள்ளி வந்து கொட்டப்படுகிறது. மருத்துவ கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் உட்பட குப்பைகள் அவ்வப்போது தீ வைத்தும் எரிக்கப்படுகிறது.இதனால் இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு நுரையீரல் பிரச்சனை, ஆஸ்துமா, புற்றுநோய் வரை ஏற்பட்டு உள்ளதாக கூறி பல்வேறு முறை போராட்டங்களை முன்னெடுத்துவருகிறனர்.கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் எரியூட்டப்பட்ட குப்பைகளின் புகை வீடுகளுக்குள் புகுந்ததால் இரவு முழுவதும் மூச்சுவிட கூட முடியாமல் அரசின் இந்த அலட்சியப் போக்கை கண்டித்து மக்கள் சிதம்பரம் – காட்டுமன்னார்கோயில் சாலையில் சாலைமறியில் ஈடுபட்டனர்.மேற்படி நகரின் புதிய சூழலுக்கு ஒவ்வாத பொதுமக்கள் குறிப்பாக கர்பினி பெண்கள், கைக்குழந்தைகள், வயதானவர்களுக்கு நோய்தொற்று முதல் புற்றுநோய்வரை ஏற்படுத்திவரும் சிதம்பரம் நகராட்சி ஓமகுளம் குப்பை கிடங்ககை அகற்றி மக்கள் வசிக்காத மாற்று இடத்தில் செயல்படுத்த வேண்டும் என்றும்கோவில் நகரமான சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு நாள்தோரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆன்மீகரீதியிலும் சுற்றுலாவிற்கும் வந்து செல்கிறனர். முக்கிய விசேச நாட்களில், திருவிழா காலங்களில் நாள் ஒன்றிக்கு 1 லட்சம் பேர்வரை நகருக்குள் வந்து செல்கிறனர். சுற்றுலாவிற்கு வரும் வாகனங்களை கோவிலை சுற்றிலும் உள்ள வீதிகளில் நிறுத்தி செல்வது வாடிக்கையாக உள்ளது. மேலும் நகராட்சி நிர்வாகமே சிதம்பத்தின் மையப் பகுதியான வடக்குவீதி, கீழவீதி பகுதிகளில் பேருந்து உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களை நிறுத்தி செல்வதற்கு ரசீது கொடுத்து வசூலும் செய்கிறது. ஏற்கெனவே கடுமையான போக்குவரத்து நெருக்கடியில் உள்ள நகரவாசிகளுக்கும் பொது மக்களுக்கும் இந்த போக்குவரத்து கடுமையான சிரமத்தை ஏற்படுத்திவருகிறது. ஆங்காங்கே இப்படி நான்கு வீதி முழுவதும் நிறுத்தப்படும் வாகனங்களால் அவசர ஊர்தி பணியாளர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பலதரப்பட்ட மக்களும் பாதிப்ப்படைகிறனர். தெற்கு வீதி, கீழவீதி மேலவீதி பகுதிகளில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. எனவே, சிதம்பரம் நகருக்குள் வரும் சுற்றுலா வாகனங்கள் சிதம்பரம் நகரின் மையப் பகுதியான, நான்கு வீதிகளிலும் நிறுத்திச் செல்ல தடைசெய்ய வேண்டும். தஞ்சை மதுரை, குடந்தை, திருவரங்கம் என பிற ஆன்மீக சுற்றுலா தளங்களில் உள்ளது போல பயணிகளை இறக்கிவிட்டு சாலைகளில் நிறுத்தப்படாமல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள உரிய இடத்தில் நிறுத்தப்படுவது போல,சிதம்பரத்தில் சுற்றுலாவிற்கு வரும் வாகனங்களை நகர தொடர்வண்டி மேம்பாலம் கீழ்பகுதி இரயிலடி சாலை உள்ளிட்ட பகுதிகளின் நிறுத்துவதற்கு அல்லது நகரின் புறவழிச்சாலையில் நிறுத்துவதற்கு ஏற்பாடுசெய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.நிகழ்வில் தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுக்குழு உறுப்பினர் ஆ.குபேரன், நகர செயலாளர் க.வேந்தன் சுரேசு, இரா.எல்லாளன், வே.சுப்ரமணியசிவா, வியஜமார்த்தாண்டம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சிதம்பரம் ஓமகுளம் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யவும் சுற்றுலா வாகனங்கள் நான்கு வீதிகளிலும் நிறுத்த தடைசெய்ய கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை

சிதம்பரம் ஓமகுளம் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யவும் சுற்றுலா வாகனங்கள் நான்கு வீதிகளிலும்

சிதம்பரம் ஓமகுளம் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யவும் சுற்றுலா வாகனங்கள் நான்கு வீதிகளிலும் நிறுத்த தடைசெய்ய கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை

சிதம்பரம் ஓமகுளம் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யவும் சுற்றுலா வாகனங்கள் நான்கு வீதிகளிலும் நிறுத்த தடைசெய்ய கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை

சிதம்பரம் ஓமகுளம் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யவும் சுற்றுலா வாகனங்கள் நான்கு வீதிகளிலும்