சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை !

சென்னை:
நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றல் திட்டத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.16 கோடி பெற்று மோசடி செய்த வழக்கில், சினிமா தயாரிப்பாளரும் நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் சில நாட்களுக்கு முன்பு புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 2020ம் ஆண்டு முதல் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் என்பவர் அறிமுகமானார்.

அவர் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்த திட்டத்தின் மதிப்பு ரூ.200 கோடி என்றும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசைவார்த்தை கூறினார். அதற்கு நான் ஒப்புக்கொண்டேன். பிறகு அவர் திட்டம் ஆரம்பிப்பதற்கான போலியான ஆவணங்களை காண்பித்து ரூ.16 கோடி வரை முதலீடு செய்ய வைத்தார். ஆனால் அவர் கூறியபடி திட்டத்தை ஆரம்பிக்கவில்லை. இதுகுறித்து நான் பலமுறை கேட்டும் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. பிறகு நான் கொடுத்த ₹16 கோடியை திரும்ப கேட்டேன், அதற்கு அவர் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் மிரட்டி வருகிறார். எனவே அவரிடம் இருந்து ரூ.16 கோடியை திரும்ப பெற்று தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

புகாரின்படி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரிக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தும் ரவீந்தர், திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் தொடங்க இருப்பதாக போலி ஆவணம் தயாரித்து அதை தொழிலதிபர் பாலாஜியிடம் காண்பித்து ₹16 கோடி பணத்தை பெற்று மோசடி செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை அசோக்நகர் 19வது அவென்யூ பகுதியில் வசித்து வந்த சினிமா தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடி நிறுவனம் தொடங்க போலியாக தயாரித்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பிறகு ரவீந்தரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சினிமா தயாரிப்பாளர் ரவிந்தர் மீது அமெரிக்காவில் உள்ள இன்ஜினியர் ஒருவரிடம் சினிமா எடுப்பதாக ₹15 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கு மத்திய குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.