சீனப் பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்த கடலூர் இளைஞர்

கடலூர்:
கடலூரைச் சேர்ந்த இளைஞருக்கும் சீனாவைச் சேர்ந்த பெண்ணுக்கும் இந்தியச் கலாச்சாரத்துடனும் தமிழ் முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.
கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீனா நாட்டை யீஜியோ சேர்ந்த பெண்ணுக்கும் கடலூர் முதுநகரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன் இந்திய கலாச்சாரத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
மணமகன் பாலச்சந்தர், மணமகளான சீனா நாட்டைச் சேர்ந்த யீஜியோவுக்கும் தமிழ் முறைப்படி பட்டு வேஷ்டி சட்டை மற்றும் பட்டு புடவை தங்க அணிகலன் அணிந்து தமிழ் முறைப்படி குண்டம் அமைத்து மந்திரம் முழங்க மங்கள இசையுடன் திருமாங்கல்யம் கட்டி திருமணம் நடைபெற்றது. சீனப் பெண் யீஜியோ ஒவ்வொரு தமிழ் சடங்குகளையும் ஆர்வமுடன் மணமகிழ்ச்சியுடன் செய்தார்.
மேலும் சீனப் பெண் யீஜியோ, மணமகனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்களை அரவணைத்து அன்புடன் பேசி மகிழ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதுகுறித்து பேசிய மணமகன் பாலச்சந்தர், ‘சீனா மற்றும் பாங்காகில் தொழில் முனைவராக இருந்து வருகின்றேன். அப்போது நானும் சீனா நாட்டை சேர்ந்த யீஜியோ பெண்ணிற்கும் சமூக வலைத்தளங்கள் (ஆப்) மூலமாக தொடர்ந்து பேசி வந்தோம். இந்த தொடர்பு நாளடைவில் நல்ல நட்பாக மாறி பின்னர் காதலாக மாறியது.
இதனைத் தொடர்ந்து இரண்டு பேரும் மனதளவில் காதல் ஏற்பட்டு இந்திய கலாச்சாரம் மற்றும் தமிழ் முறைப்படி பெற்றோர்கள் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணியதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.திருமணத்திற்கு முன்பு இருந்த காதலுடன் எங்களது வாழ்க்கை பயணத்தை ஆனந்தமாக கடப்போம் என நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.