செந்தில்பாலாஜிக்கு அறுவை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13-ந்தேதி சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையின் முடிவில் நள்ளிரவில் அவரை இல்லத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்து செல்ல அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி செய்தனர்.

அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து செல்வதற்காக கொண்டு வந்த காரில் ஏற்றி, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருடைய இதய ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பதாக தெரிவித்தனர். அதற்காக அவருக்கு உடனடி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நீதிபதியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து செந்தில்பாலாஜியை ‘ரிமாண்ட்’ செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்தது. அதன்படி அமலாக்கத்துறை வக்கீல் ரமேஷ், அதிகாரிகளுடன் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கு நேரில் வந்து நீதிபதி எஸ்.அல்லியை சந்தித்து சம்பவத்தை விளக்கினார்கள். இதையடுத்து நீதிபதி அல்லி, நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு நேரில் வந்து, செந்தில்பாலாஜியை ரிமாண்ட் செய்வதற்கு ஒத்துக்கொண்டார். மேலும் 28-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அவரை வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவனையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 2 அல்லது 3 நாட்களில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவின்படி அமைச்சர் செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதி. செந்தில் பாலாஜியின் மனைவியின் விருப்பத்தின்பேரிலேயே காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்து வருகின்றன” என தெரிவித்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.