சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுனர் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்தடைந்தார். ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். இந்த பயணத்தின் போது 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை-மந்திரி எல்.முருகன், அமைச்சர்கள், முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜீகே வாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





