சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றுசவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.45,320-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் விலை இரண்டு நாட்களாக மாற்றமின்றி இருந்து வந்தது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,665-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,320-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,896-க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலை 0.50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.81,000-ஆக இருக்கிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






